கண்ணெல்லாம் உன் வண்ணம்..!

ebook

By ஆர்.மணிமாலா

cover image of கண்ணெல்லாம் உன் வண்ணம்..!

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

ஒரு வழியாய் எல்லாப் பொருட்களும் வந்தமர்ந்துவிட குடும்பம் மொத்தமும்... இங்கே, அங்கே என்று நகர்த்தி ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள்.
"சொந்தமாய் வீடு வாங்கணும்ங்கறது எத்தனை வருஷக் கனவு? லேட்டானாலும்... இப்பவாவது நிறைவேறுச்சே... ரொம்ப சந்தோஷம்ங்க..." புனிதா... ப்ரிட்ஜுக்குள் உரிய இடத்தில் பொருட்களை வைத்துக் கொண்டிருந்தாள்.
ரமணன் டி.வி. வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய யோசித்தவர்... மனைவியின் பக்கம் திரும்பினார்.
"அதென்ன... லேட்டானாலும்? அத்தனை கடமையும் முடிச்சிட்டு... இதையும் வாங்கியிருக்கேனேன்னு சந்தோஷப்படு..."
என்றவருக்கு நாற்பத்தி எட்டு வயது! தலைக்கு அடித்த டையின் உபயத்தாலும்... வகீகரமான முகத்தாலும் இளமை விலகவில்லை.
அப்பா இல்லாக் குடும்பத்தை தாங்கிச் சுமந்தது ரமணன்தான்! தம்பியின் படிப்பு, இரண்டு தங்கைகளின் திருமணம் என்னும் கடமைகளை முடித்து நிமிர்வதற்குள்... இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்து, வளர்ந்து நிற்கிறார்கள்.
நெடுநாளையக் கனவு சொந்த வீடு! இ.எம்.ஐ.யில் வாங்கியாயிற்று...! இரண்டு பெண்களையும் கரை சேர்க்க வேண்டுமே! ரமணன் படித்த படிப்பு... எங்கே சென்றாலும் வேலைக்கு இரு கரம் நீட்டி அழைத்துக் கொள்வார்கள்.
"ஒண்ணும் சொல்லிவிடக்கூடாதே! நான் ஒண்ணும் தப்பாச் சொல்லலையே... நமக்குன்னு சொந்த வீடு! இனி ஹவுஸ் ஓனரோட தொணதொணப்பு இல்லே... இதைப் பண்ணாதீங்க... அதைப் பண்ணாதீங்கன்னு டார்ச்சர் இல்லே... சந்தோஷமா இருக்குங்க!""சரி... சரி... ஆகற வேலையப் பாரு!"
"எனக்கு இங்கே ஒரு ஃப்ரெண்ட் கிடைச்சிருக்காங்க டாடி!"
"என்னது... ஃப்ரெண்டா? இங்கே வந்து முழுசா ரெண்டு மணி நேரம் கூட ஆகலே... அதுக்குள்ளே எங்கே புடிச்சே?" புனிதா ஆச்சர்யமாய் மகளைப் பார்த்தாள்.
"லிஃப்ட்லம்மா... இதே அபார்ட்மெண்ட்ல இருக்காங்க... எத்திராஜ்ல படிக்கிறாங்களாம்..." என்றாள் திவ்யா.
"சரி... சரி... சிந்து எங்கே?"
"அவ புக்ஸையெல்லாம் ஷெல்ப்ல அடுக்கி வச்சிட்டிருக்காம்மா...!"
"சரி... சரி... டைமாய்டுச்சு... நான் ஹோட்டலுக்குப் போய் சாப்பிட டிபன் வாங்கிட்டு வந்துடறேன்!" ரமணன்... கைகளை துடைத்தபடி ஸ்டூலில் இருந்து இறங்கினார்.
"போன் பண்ணா டோர் டெலிவரி பண்ணிடப் போறாங்க. இத்தனை வேலைய வெச்சுக்கிட்டு ஓடணுமா?"
"வேணாம்... வேணாம்... ஃபேஸ்புக்ல என்னென்னமோ போடறான்... யாரையும் நம்ப முடியல...!"
".....!"
"லன்ச் சமைச்சிடறியா? முதல் நாள் சமைக்கணும்னு சொல்வாங்க!"
"அதான்... நாம போன மாசம் பால் காய்ச்சும் போதே சமைச்சோமே...! இன்னைக்கு மட்டும் ஹோட்டல்ல பார்த்துக்கலாம்... எல்லாம் ஒழுங்குபடுத்தவே ரெண்டு நாளாகுமே!"
சொன்ன மனைவியை ஒரு பார்வை பார்த்தபடி சட்டையின் பட்டன்களை போட்டார்.
ஹைடெக் அலுவலகம் அது!
பளபளக்கும் ஷூக்களும், நலுங்காத உடையுமாய், கண்களில் படிப்பும், சம்பளமும் தந்த அலட்சியம் மிதக்க ஆண்களும்.
லிப்ஸ்டிக் கலையாமல்... கூந்தல் அலுங்காமல், சருமப் பொலிவுடன், நாகரீக உடையுடன் பெண்களும்.மாதவி அந்த அலுவலகத்தில் உயர் பதவியில் இருப்பவள். அங்கு பணிபுரியும் மற்ற பெண்களைவிட வயதில் மூத்தவளாய் இருந்தாலும்... மற்ற எல்லாரையும் விட அழகிலும் உயரத்தில் இருந்தாள்.
இருபத்தைந்து வயது இளைஞன் கண்கள் கூட அவள் பார்க்காத நேரங்களில் அவசரமாய் அவள் உடம்பில் அலைந்து திரிந்தன.
போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்த மாதவியின் முகபாவனைகள் நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருந்ததை தினகர் ரசித்துக் கொண்டிருந்தான்.
அவளுக்கு அடுத்தபடி பொறுப்பில் இருப்பவன்.
"இன்னைக்கேவா?"
".....!"
"ஆபீஸ்ல மீட்டிங் இருக்கே?"
".....!"
"ஓ... ஓக்கே... ஓக்கே...?" யோசனையுடன் போனை கட் பண்ணினாள்.
"தினகர்...!"
"எஸ்... மேடம்!"
"இன்னைக்கு ஆல் ஓவர் பிராஞ்லேர்ந்தும் ஆபீஸர்ஸ் மீட்டிங் லீ மெரிடியன்ல இருக்காமே...!"
"ஆமாம்... மேடம்!"
"ஏன் எனக்குச் சொல்லலே? இன்னைக்கு நம்ம ஆபீஸ்ல மீட்டிங் இருக்கே?"
"நான் உங்களுக்கு ரெண்டு நாள் முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணினேன் மேடம்!"
"சொன்னதா ஞாபகம் இல்லை... எனிவே... இங்கே மீட்டிங்கை நீங்க இருந்து பார்த்துக்குங்க..."
"ஓக்கே. மேடம்!

கண்ணெல்லாம் உன் வண்ணம்..!