Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
"ஊழலும் ஊழல் நிமித்தமும்" - ஊழலுக்கு எதிராக படைக்கப்பட்ட ஓர் படைப்பாகும். ஊழல் என்பது யாது? அஃது எங்கெல்லாம் நடந்தேறுகிறது; அதனால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் என்னென்ன? என்பதைத் தெள்ளத் தெளிவாக எம்முடைய படைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஊழலுக்கான காரணங்கள் பற்றியும்; ஊழலால் நம் பாரதநாடு எவ்வாறு பொருளாதார பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்கிறது என்பதைப் பற்றியும்; தெள்ளத் தெளிவாக இந்நூல் விளக்குகிறது. பொருளாதார நெருக்கடியால் ஓர் நாடு எவ்வாறு வீழ்ச்சியுறுகிறது; அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றியும்; கலப்பட ஊழல்கள் பற்றியும்; மேலும் ஊழலை நாம் எப்படி ஒழிக்க வேண்டும் என்பதைப் பற்றியும்; இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான அவசியத்தைப் பற்றியும்; ஊழலுக்கெதிரான அரசு அமைப்புகள் பற்றியும்; ஊழலை ஒழிக்க அவசிய நடவடிக்கைகள் பற்றியும்; விரிவாக எம்முடைய படைப்பில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் ஊழலுக்கெதிராக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் பற்றியும்; இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை பற்றியும்; ஊழலற்ற பாரதத்தை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும்; அவற்றை ஒழிக்க இளைஞர்களின் பங்கு என்ன? என்பதைப் பற்றியும்; இப்படைப்பில் மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் பொருட்டு மிக எளிமையான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது. இப்படைப்பானது யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் படைக்கப்பட்டதல்ல. ஊழலுக்கு எதிராக நடக்கும் அறப்போராட்டங்கள் பற்றியும்; ஒரு நாடு எவ்வாறு முன்னேற வேண்டும்? ஊழலை நாம் எவ்வாறு தடுக்க வேண்டும்? நாட்டை எவ்வாறு வளர்ச்சிப் பாதையில் செல்ல வைக்க வேண்டும்? என்ற நல்லெண்ணத்தோடும் சமூக அக்கறையோடும் நல்லுணர்வோடும் இயற்றப்பட்ட ஒரு படைப்பாகும்.