
Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
அனைவருக்கும் அடியேனுடைய நமஸ்காரங்கள். நான் வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எனக்கு உதித்த எண்ணம் தான் இந்த புத்தக வடிவம்.
ஸ்ரீராமபிரான் மீது அளவற்ற பக்தியும் ஈடுபாடும் கொண்டுள்ளது நமது பாரத தேசம். ராம ராஜ்ஜியத்தை தனது கனவாகக் கொண்டிருந்தார் நமது தேசப்பிதா காந்தியடிகள்.
இராம கதையை நான் படித்த பொழுது அதில் எண்ணற்ற விஷயங்கள், தத்துவார்த்தங்கள், நீதிநெறி போதனைகள் அடங்கி உள்ளதை அறிந்துகொண்டேன். எத்தனையோ புத்தகங்கள் ராமாயணம் பற்றி உள்ளதே! எனக்கு அதை எழுத தகுதி உள்ளதா? என்று எனக்குள் பலமுறை கேள்வி எழுந்தது. இருப்பினும், நமது வருங்கால சந்ததியினராகிய குழந்தைச் செல்வங்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் எழுத வேண்டும் என்ற ஆவலில், உந்துதலில் என் சிற்றறிவிற்ககு எட்டியவரை முயன்றுள்ளேன். இதில் உள்ள குற்றம், குறைகளை மன்னித்து, ஏற்றுக்கொண்டு அடியேனுக்கு ஊக்கம் கொடுத்திட பணிவுடன் வேண்டுகிறேன்.
இதனை எழுத எனக்கு உதவியாக இருந்த அமரர் ராஜாஜி அவர்களின் சக்கரவர்த்தி திருமகன் காப்பியத்திற்கு எனது நன்றிகள்.
இந்தப் புத்தகத்தை எழுத இரவு பகல் பாராமல் எனக்கு உறுதுணையாக இருந்து ஊக்கம் அளித்த எனது மனைவி கோமளவள்ளி மற்றும் எனது இரு மகன்கள் அனிருத், அக்ஷய் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.
மேலும் இதனை E- புத்தக வடிவமாக வெளியிட அன்புகூர்ந்து முன்வந்துள்ள புஸ்தகா டிஜிட்டல் மீடியா நிறுவனத்திற்கும், அதன் இயக்குனர் டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.hd. அவர்களுக்கும் எனது நன்றிகள்.