
Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
வடபாரதத்தில் மெளரியர்கள், மற்றும் இந்தியாவின் பொற்காலம் என்றழைக்கப்பட்ட குப்தர்களின் ஆட்சிக்கு இணையாக; வர்த்தன மன்னர்களில் சிறப்பாகத் திகழ்ந்தவர் "பரமபத்தாரக மகாராஜாதி ராஜர் என்றழைக்கப்பட்ட "ஹர்ஷவர்த்தனர்" ஆவார். இவர் தான் வர்த்தனராஜ்யத்தை சாம்ராஜ்யமாக்கியவர். கி.பி.606 முதல் கி.பி.647 வரை "ஹர்ஷவர்த்தனர்" சாம்ராஜ்யத்தை மிகச்சிறப்பாக ஆட்சி புரிந்ததாக சரித்திர சான்றுகள் குறிப்பிடுகின்றது. இந்த வர்த்தன சாம்ராஜ்யத்தை "ஹர்ஷவர்த்தனர்" தன் பதினாறாவது வயதில் தவிர்க்க முடியாத அசாதாரண நிலையில் வர்த்தனராஜ்ய மன்னராக முடிசூட்டிக்கொண்டது முதல் ஆறு ஆண்டுகளிலே உருவாக்கிவிட்டார் என்றால் அவரின் சிறப்பு - பெருமை எத்தன்மையுடையது என்பதை விவரிக்கும் முகமாக உருவானதுதான் இந்த சரித்திர நாவல்.
சரித்திர நாவல்களுக்கே உரிய இலக்கணங்கள் என்று உருவாக்கப்பட்டவைகளிலிருந்து இந்த சரித்திர நாவல் சற்று மாறுபட்டதாகத் தோன்றும். தேவையற்ற அதிகப்படியான வர்ணனைகள், சிருங்கார ரசங்கள் வார்த்தை ஜாலங்களுடன் கூடிய சலிப்படைய வைக்கும் உரையாடல்கள் என்று அதிகம் இருக்காது. கதையுடன் ஒட்டிய அளவிலே இருக்கும் என்பதுடன் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே கதைப்போக்கு செல்லும். படிக்க சலிப்பாகி பக்கங்களைத் தள்ளிவிடும் நிலை ஏற்படாது. ஒருபக்கத்தைக்கூட தள்ளிவிட முடியாத அளவில் சம்பவங்களின் சேர்க்கை இருக்கும். வர்ணனைகள், சிருங்கார ரசம், வார்த்தை ஜாலங்களுடன் எனக்கு எழுதவராது என்பதல்ல. "ஹர்ஷவர்த்தனர்" வாழ்க்கையே 16 வயது முதல் போராட்டம்தான். அடுத்தடுத்து வாழ்க்கையில் நிகழ்ந்த சோகங்கள்; பெரும் போர்கள் என்று 16 வயதில் பட்டத்திற்கு வந்தது முதல் நிற்கவே நேரமில்லாமல் பறந்து கொண்டிருந்த நிலையால் சரச சல்லாபங்களை அதிகம் சேர்க்க என்மனம் ஒப்பவில்லை. இனிகதைக்குள் நுழையலாம்! வாருங்கள்.