Sagunam Sariyillai

ebook

By Bakkiyam Ramasamy

cover image of Sagunam Sariyillai

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

ஓரே மூச்சில் இத்தொகுதியை வாய்விட்டு சிரித்தபடியே ரசித்துப் படித்தேன்.

'அப்பா ரூம்' என்ற முதல் கட்டுரையே காந்தமாய் இழுக்கிறது. அப்பா ரூம் என்ற அந்த அறையில் இல்லாத பொருட்களே இல்லை. வீட்டு உபயோகத்திற்கு தேவையில்லாதவற்றை எல்லாம் திணித்து வைத்திருக்கும் அறை!

'முழங்கால் அளவு உயர ராதையும் கிருஷ்ணனும் சல்லாபத்தில் சாயம்போய் சற்றே கை கால் உடைந்து எக்ஸ்ரேயில் எலும்பு தெரிவது போல புல் கம்பிகள் தெரிய நிற்கும் திருக்கோலம் அப்பா ரூமில்தான்' என்று வர்ணிக்கும் இடத்தில் அட இது நம்ம வீட்டிலும் ஓரமாய் சாய்ந்து இருக்கே என்று எண்ணத் தோன்றுகிறது.

கட்டுரையின் முடிவுப் பகுதி இது:

தாத்தா இறந்து போய் ஆஸ்பத்திரியிலிருந்து 'பாடி' வந்தால் வராந்தாவில் கிடத்தினாள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும். அப்பா ரூம்ல போட்டுடலாம். இது அப்பா ரூம் அல்ல அப்பா(வி) ரூம் என்று அழைக்கலாம்.

அடுத்தடுத்து வரும் 'பூம் பூம் பூம்' என்ற கட்டுரையில் அந்த மாட்டுக்கு திமிர் கிடையாது. திமில் உண்டு. அந்த திமிலும் மாட்டுக்காரன் விசேஷ தொப்பியால் பெரிது படுத்தப்பட்டது என்கிறார்

பீப்பீ வாத்தியத்தில் பாடலின் 12 வரிகள் வாசிப்பான் என்றும் அதற்கு மேல் அவனுக்கு தெரியாது என்று மாட்டுக்கும் தெரியும். மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் கட்டுரை.

'சித்திரைக்கு வைகாசியே மேல்' என்ற கதையில் பாட்டி குழந்தைக்கு சாதம் ஊட்டிய படி குழந்தைக்கு சொல்லும் வார்த்தைகளும் பேரன் வெற்றிலை பாக்கு சேர்த்து பாட்டியின் வாயில் திணிக்கும் வர்ணனையும் மருமகளின் பதட்டமும் வாய்விட்டு சிரித்து ஆகவேண்டும். கதையில் கடைசி வரியில் வரும் திருப்பம் பலே.

'டிகாக்‌ஷன் போடும் கலை' என்ற கட்டுரை அனுபவங்களின் உச்சம். பல வீடுகளில் பல ஆண்கள் படும் அவஸ்தையை நன்றாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

அடுத்தடுத்து வரும் 'கங்கா ஸ்நான புண்ணியம் வேண்டுமா', 'எனது கஷ்ட தெய்வங்கள்', 'ஈரோட்டுத் தண்ணி' கட்டுரையில் சொல்லியிருக்கும் யோசனைகள் நம் வயிற்று வலிக்கு காரணங்கள்.

'ஹாரிங்டன் சுரங்கபாதை' கட்டுரையில், எழுத்தாளர் பொது ஜனங்களின் பிரக்ஞையைத் தூண்டுகிறார். சிந்திக்க வைக்கும் கட்டுரை 'ஹோம் பிராணிகள்' என்ற கட்டுரை. மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்துள்ளது. முதியோர் இல்ல வாசிகளையும் வார இறுதி நாட்களில் வந்து பார்க்கும் மகன் மகள் பேரன் வந்து சந்தித்துப் பேசும் உரையாடல்கள் கண்ணீரை வரவழைக்கின்றன.

ஆசிரியரின் பார்வையில் படாத விஷயங்களே இல்லை. மனைவியின் ரவிக்கையில் முதுகுப் பகுதியில் உள்ள தாராளத்தை மனதில் உறைக்கும்படி மனோதத்துவ பேராசிரியர் செய்யும் உத்தி பலே.

'இரண்டு வயசாளியும் ஒரு கடற்கரையும்' இரண்டு பெருசுகளின் வாழ்க்கை முறையில் நடைமுறை சிக்கல்கள் பற்றி தெளிவாக புரிய வைக்கிறது

'கலாட்டா தீபாவளி' மிகச் சிறந்த நகைச்சுவை சித்திரம். தலைப்புக்கு ஏற்ப படித்து சிரியுங்கள்.

'கரண்டி' கட்டுரையில் செல்போனுடன் போராடும் அழகு கோலம் அல்லது அவலம்.

ஜல்லிக்கட்டு மாதிரி 'குதிரை கட்டு' சுவாரஸ்யமான கற்பனை.

'கம்மோடு கதாநாயகி', 'விவேகம் இல்லாத விவாகரத்துக்கள்' இரண்டிலும் சினிமா கதாநாயகிகள் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். கனவுக் கன்னியாக இருந்த ஒரு கதாநாயகி சில வருடங்கள் கழித்து கிங்காங்குக்கு கவுன் போட்ட மாதிரி ஸ்டுடியோவில் மகளின் படப்பிடிப்பில் மூலையில் கிடக்கும் காட்சி மனதை நெருடுகிறது.

அனைத்துக் கட்டுரைகளும் சுவாரஸ்யமாக உள்ளன.

ஆசிரியர் தொடாத விஷயங்களே இல்லை. அவர் ஒரு சூப்பர் மார்க்கெட்!

பாமா கோபாலன்

Sagunam Sariyillai