Karna Parambarai

ebook

By Kalachakram Narasimha

cover image of Karna Parambarai

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

புக்ஸ் இந்தியா - வெளியிட்டுள்ள 'தமிழ்நாடு - சங்க காலம் முதல் செம்மொழி காலம் வரை,' என்கிற களஞ்சியத்தில், முக்கிய சில தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி ஒரு வாழ்க்கை குறிப்பு தந்துள்ளனர். கல்கி, புதுமை பித்தன், அகிலன், சாண்டில்யன், நா. பார்த்தசாரதி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், சிவசங்கரி வரிசையில் என் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரமித்துப் போய் நின்றுவிட்டேன். என் தாய் உள்பட பெரிய எழுத்தாளர்கள் பலர் இருக்கும் போது, என் பெயர் எதனால் குறிப்பிடப்பட்டது என்று குழம்பினேன். பிறகு என் வாழ்க்கைக் குறிப்பில், நான்கே நாவல்கள் எழுதி, தனக்கென்று ஒரு தனி வாசகர் வட்டத்தை அமைத்துக் கொண்டிருப்பவர் என்று என்னைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. எனது இந்தப் பெருமைக்கு முழு காரணம் இருவர்.

முதலில் எனது தாய் கமலா சடகோபன். எனது தமிழ் ஆர்வத்திற்கு அவரே வித்திட்டவர்.

நான் முன்பு சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். 1000 நாவல்கள் எழுதி நூலகங்களில் அடுக்கப் பட்டு அவை புழுதி படிந்து கிடப்பதைக் காட்டிலும், நான்கு புத்தகங்கள் எழுதினாலும், அவை வருங்காலத் தலைமுறையினரின் கைகளில் தவழ்ந்து கொண்டிருப்பதைப் பெரிய விஷயமாகக் கருதுகிறேன். எனது பத்திரிகைப் பணியில் மிகவும் பொறுப்பான பதவியை வகித்துக் கொண்டிருப்பதால், என்னால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாவல்களை மட்டுமே எழுத முடிகிறது. ஆங்கில நீரையும், தமிழ்ப் பாலையும் கலந்து பருகிக் கொண்டிருக்கும் அன்னப்பறவையாக உழல்கிறேன். வெறும் பாலை மட்டுமே குடித்துக்கொண்டு, நீரை உமிழும் காலம் விரைவில் வரும்.

இதோ –

எனது அடுத்த நாவல் – 'கர்ணபரம்பரை'

இதுவும் ஒரு வித்தியாசமான நாவல்தான். விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லை. கையில் எடுத்தால் கீழே வைக்க முடியவில்லை என்று கூறுபவர்களை இது ஏமாற்றாது. ஆனால் அப்படிக் கூறுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. இந்த நாவலைப் படிக்க உங்களுக்கு நான்கு கைகள் தேவை.

புத்தகத்தைப் பிடித்துக் கொள்ள ஒரு கை, பக்கங்களைப் புரட்ட மற்றொரு கை, உங்கள் இரு காதுகளையும் மூடிக்கொள்ள இரு கைகள். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பது நாவலைப் படித்ததும் உங்களுக்கு விளங்கும்.

நமது தமிழ் மண்ணில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. இன்னும் மனிதர்களின் கால் படாத பகுதிகளும் இருக்கின்றன. உணர்வுகளால் இந்த பிரபஞ்சத்தையே அளந்த பல பெரிய மகான்கள் இங்கே வாசம் செய்துள்ளனர். சிவனாரும் உமையவளும் திருமணம் செய்து கொண்டபோது, பாரம் தாங்காமல் பூமி சரிய, அதை சமன்படுத்த வேண்டி அகத்திய மாமுனிவர் தெற்கே அனுப்பப்படுகிறார். அவர் கால் வைத்த மண் தமிழ் மண். அவரையே பிரமிக்க வைத்த பல விஷயங்கள், அவர் கால் பதித்த வேளையில் நமது தமிழ் மண்ணில் இருந்தன. அவை இப்போதும் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எப்போது அந்த இரகசியங்கள் வெளியிடப்படுகின்றதோ, அப்போது அவற்றால் பல ஆபத்துகள் உண்டாகும். செந்தீ, புவி, கால், நீர், விண் என்கிற பஞ்ச பூதங்களையும் சுரண்டி விற்கும் இன்றைய அரசியல்வாதிகள், இந்த இரகசியங்களையும் துஷ்பிரயோகம் செய்தோ அல்லது, நமது எதிரிகளுக்கு விற்றோ பணம் பண்ணக்கூடும் என்பதாலேயே, சில இரகசியங்களை சித்தர்கள் மனிதர்களின் கைக்கு எட்டாவண்ணம் மறைத்து வைத்திருக்கின்றனர்.

அப்படி ஒரு இரகசியம் தான் களவாடப்படுகிறது. அந்த இரகசியத்தை மீட்பதற்கு நடக்கும் போராட்டம் தான், கர்ணபரம்பரை. இந்தக் கதையின் நாயகி, வயது முதிர்ந்த, கண்பார்வை இல்லாத ஒரு பெண் என்பதே ஒரு வியப்பை ஏற்படுத்தும் விஷயம். இந்த நாவலைப் படித்து முடித்தபின், இப்படியும் கூட நடக்குமா? என்று எனக்கு ஃபோன் செய்பவர்களுக்கு இப்போதே சொல்லி விடுகிறேன்.

"இதுபோல் அல்ல, இதைவிட இன்னும் பல பெரிய மற்றும் அற்புதமான விஷயங்கள் எல்லாம் தமிழ் நாட்டில் இருக்கின்றன. இரகசியமாக வைக்கப்பட்டு இருக்கும் அந்த மேன்மையான விஷயங்கள், இந்த பிரபஞ்சத்தையே கட்டிப்போட வைக்கும் ஆற்றல் உடையவை. அந்த இரகசியங்கள் மர்மங்களாக இருக்கும் வரை அனைவருக்குமே நல்லது. எப்போது அவற்றை நாம் கையாளுகின்றோமோ, அப்போது நமது அழிவு நிச்சயம்."

பீடிகையை இத்துடன் நிறுத்தி விடுகிறேன். நீங்கள் கர்ணபரம்பரையைப் படிக்கத் துவங்கலாம்.

அன்புடன்,
'காலச்சக்கரம்' நரசிம்மா
மின்: tanthehindu@gmail.com

Karna Parambarai