Atho Ange Aarambam

ebook

By Pattukottai Prabakar

cover image of Atho Ange Aarambam

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

அன்புள்ள உங்களுக்கு,ஹலோ,ஒரு ஆதரவான கரம் என் நெஞ்சில் அன்புத் துப்பாக்கி வைத்து, "ம்... நிறைய எழுது" என்றது. எழுதினேன் "குறுநாவல் தா" என்றது. தந்தேன். "நாவல் எழுதிப் பாரேன்" என்றது. பார்த்தேன். "இளைஞர் பத்திரிகைக்கு ஆசிரியர் குழுவுக்கு வா" என்றது, வந்தேன். "அதில் முதல் தொடர்கதை நீயே செய்யேன்" என்றது. செய்தேன்.Pastime எழுத்தாளன் Parttime எழுத்தாளனானேன்.அந்தக் கரத்திற்குச் சொந்தமானவர் திரு சாவி. அவர்கள், ஒவ்வொரு முறையும் பேனாவை என் விரல்கள் தொடும்போது நான் நினைத்துக் கொள்கிற நபர். என் இதய நன்றிகள் என்றென்றும் அவருக்கு.என் வரையில் நான் எழுதுவது ஆத்ம திருப்திக்காக என்றால் அது பரிசுத்தமான பொய். பணத்திற்காக என்றால்... இந்த வியாபாரத்தை இன்னும் பிஸியாக செய்யமுடியும் என்னால் இரண்டும் இல்லை. உள்ளுக்குள் ஒரு குரங்காட்டி உட்கார்ந்து கொண்டு எழுது என்கிறான். எழுதுகிறேன். எழுதுகையில் ஒரு சுகம். எத்தனை பேரை படிக்க வைக்கிறோம் என்று நிச்சயமான ஒரு ego. புகழுக்கான ஒரு எதிர்பார்ப்பு. ஒரு வரி பாராட்டுக்களில் இதயம் அடிக்கிற பனி நீர் நீச்சல்கள், இன்னும் வார்த்தைகளில் கொண்டு வர சிரமம் இருக்கிற எட்செட்ரா உணர்வுகள், இந்த சின்னச் சின்ன சந்தோஷங்களுக்காகவே நான் எழுதுகிறேன்.சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். நாம் கதைகளை ஒவ்வொரு வரியாய் சிந்தித்துப் படிக்கிறவர் எண்ணிக்கை இன்கம்டாக்ஸ் ஏமாற்றாமல் கட்டுகிற நடிகர்கள் எண்ணிக்கையைப் போல மிகக் குறைவு. அநேக கதைகள் இன்றைக்கு பயணங்களில் தான் படிக்கப்படுகின்றன. அல்லது ஒரு கண் வைத்துக் கொண்டு, குழந்தைக்கு ஒரு கையால் விளையாட்டு காட்டிக்கொண்டு, குறும்பு செய்கிற கணவனின் விரல்களை அதட்டிக்கொண்டு... வளைக் கரங்கள் படிக்கின்றன.இந்த நிலையில்... கதைகளினால் சமுதாயத்தைப் புரட்டிவிடுகிற அசட்டுத்தனமான பொய் நம்பிக்கைகள் என் வசம் இல்லை கதைகள் தருவது அந்த நிமிடத்துச் சலனங்களே...அவைகளினால் மாற்றங்கள் என்பது சத்தியமாய் சாத்தியமில்லை.மனிதனைப் பாதிப்பது கதைகள் அல்ல; இன்னொரு மனிதன் தான். சம்பவங்கள் பாதிக்கின்றன, அச்சில் தருகிற கற்பனைக் காட்சிகள் அவனைத் தன் அனுபவங்களோடு ஒப்பிட மட்டுமே வைக்கின்றன.மனிதர்கள் மாறுபட்டவர்கள், மாறுபட்ட விருப்பம் உடையவர்கள், அவர்களுக்கு சமூக, நகைச்சுவை, காதல், மர்ம, சரித்திர, விசித்திர கதைகள் என்று எல்லாமே தேவைப்படுகின்றன.நான் அதிகமாய் துப்பறிகிற மர்ம நாவல்களையே எழுதுவதன் உள் நோக்கம் எதுவும் இல்லை. எனக்கு அது பிடிக்கிறது.அவ்வளவுதான். இந்த கதைகள் எழுத சிக்கல்களை சிந்திக்க வேண்டும். ஆக, வெறும் கற்பனையோடு மூளைக்கு வேலை சமாச்சாரமும் இதில் இருக்கிறது. அறிவுக்கு தீனி கிடைக்கிறது. நிச்சயமாய் சொல்வேன் "Writing or thriller is not an easy joke."நீங்கள் ஏன் குடும்பக் கதைகள் மட்டுமே எழுதக்கூடாது என்று என்னை கேட்கும் கேள்வி... ஒரு என்ஜினியரைப் பார்த்து நீங்கள் ஏன் மருத்துவராகவில்லை என்றோ... வக்கிலைப் பார்த்து நீங்கள் ஏன் ஆடிட்டர் ஆகவில்லை என்றோ கேட்கிற கேள்வியாகவே நான் உணர்கிறேன்.எனக்குப் பிடித்ததை எழுதுகிறேன். வாசகர்களுக்கு பிடிக்கும்படி எழுத முயற்சிக்கிறேன். ரசிப்பவர்களின் பாராட்டுகள் என்னைச் சந்தேகமில்லாமல் உற்சாகப்படுத்துகிறது. ரசனையில் மாறுபட்டவர்களின் கருத்துக்கள் என்னைப் பாதிக்கவில்லை. மென்மையான புன்னகையோடு அவற்றையும் வரவேற்கிறேன்.பிரியங்களுடன்,பட்டுக்கோட்டை பிரபாகர்

Atho Ange Aarambam