
Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
கிறிஸ்தவம் என்பது இயேசுவின் ரசிகர் மன்றம் அல்ல. இந்த உலகத்தில் எப்படி வாழவேண்டும் என்பதைக் கற்றுத் தரும் ஒரு மீட்பின் வழி. ஆனால் இன்றைக்கு கிறிஸ்தவம் இயேசுவின் புகழ்பாடும் இடமாக மாறிவிட்டது. அவருடைய போதனைகளும், வழிகாட்டல்களும் முதன்மை இடத்தை இழந்து விட்டன. இயேசுவின் போதனைகளின் படி வாழவேண்டும் என இயங்குபவர்கள் வெகு சிலரே.
இயேசுவின் போதனைகளை மிகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் "எல்லாவற்றுக்கும் மேலாய் கடவுளை நேசி, தன்னைத் தான் நேசிப்பது போல் பிறரையும் நேசி" என்று சொல்லி விடலாம். அத்தனை சட்டங்களும், தீர்க்கத்தரிசனங்களும் எல்லாமே இந்த கட்டளையில் அடங்கிவிடுகின்றன.
மதம் என்பது மனிதனை ஆன்மீக வாழ்வுக்குள் பக்குவப்படுத்த வேண்டும். அவனை வன்முறையாளனாய் மாற்றாமல் நன்முறையாளனாய் மாற்றும் பணியைச் செய்ய வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு செயலையும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விவிலியம் மிகவும் தெளிவாக விளக்குகிறது.
"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு" என்பது மட்டுமே கிறிஸ்தவத்தைப் பற்றி பெரும்பாலான மக்கள் சொல்லும் வாக்கியம். இது ஒரு சின்ன போதனை மட்டுமே. அதையும் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் போதித்த இயேசுவே சாட்டை பின்னி ஆலயத்தில் வியாபாரம் செய்தவர்களை அடித்து விரட்டினார். தன்னை அவமானப்படுத்துகையில் அமைதியாய் இருந்த இறைவன், ஆலயத்தின் தூய்மை அவமானப்படுகையில் ஆயுதமேந்தினார். இந்த முரணைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அன்பு, பணிவு, மகிழ்ச்சி, செபம், மனிதநேயம், பாவமின்மை உட்பட இயேசு போதித்த விஷயங்கள் ஒவ்வொன்றுமே மனிதனை செம்மைப்படுத்தும் விஷயங்களாய் இருந்தன. சமூகத்தின் மீதும், சகமனிதன் மீதும் கொண்ட கரிசனையின் மீதே இயேசுவின் போதனைகள் வெளிப்பட்டன. அவருடைய சிந்தனையும், ஒன்றிப்பும் தந்தையாம் கடவுளிடம் இருந்ததால் மட்டுமே அவருக்கு இது சாத்தியமானது
இயேசு மனிதனாய் வந்ததன் நோக்கம் நாம் அவரை கொண்டாட வேண்டும் என்பதற்காக அல்ல !ஒரு மனிதன் எப்படி பாவத்தை வென்று, மனிதத்தை அரவணைத்து, இறைவனுக்கு ஏற்புடையவராய், மிக மிக மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழ்வது என்பதை வாழ்ந்து காட்டுவதற்குத் தான். போதனைகள் என்பவை தபாலில் நீச்சல் கற்பது போல. வாழ்ந்து காட்டுவது என்பது நீச்சல் குளத்தில் குதிக்கும் ஆசிரியரைப் போல. இயேசுவின் வாழ்க்கை ஒரு முன் மாதிரியான வாழ்க்கை. இயேசுவின் வார்த்தைகளையும், அவரது வாழ்க்கையையும் பின்தொடர்வதில் இருக்கிறது ஆனந்தமான வாழ்க்கையின் ரகசியம்.
இந்த நூலிலுள்ள கட்டுரைகள் கிறிஸ்தவத்தின் வெளிச்சத்தில் நமது வாழ்க்கையை ஒப்பீடு செய்யவும், சரி செய்யவும் அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்தவம் என்பது ஒரு அடையாளம் அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அதைப் புரிந்து கொள்வதில் தான் இருக்கிறது இவ்வுலக வாழ்வின் மகத்துவம்.
இந்த நூல் கடந்த சில ஆண்டுகளாக தேசோபகாரி எனும் கிறிஸ்தவ இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தேசோபகாரி தமிழின் ஆரம்பகால பத்திரிகைகளில் ஒன்று. சுமார் 180 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவரும் பத்திரிகை இது என்பது பிரமிப்பூட்டுகிறது.