Indha Ithazhil Arambamagirathu

ebook

By Anuradha Ramanan

cover image of Indha Ithazhil Arambamagirathu

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

அன்பிற்குரிய வாசக நண்பர்களுக்கு வணக்கம். நலம்; நலம்தானே...

இந்தக் கதையைப் பற்றி உங்களுடன் கொஞ்சம் மனசு விட்டுப் பேச ஆசைப்படுகிறேன்.

'இந்த இதழில் ஆரம்பமாகிறது' - 1980-களின் இறுதியில் - இதயம் பேசுகிறது தொடராக வந்த நாவல். இன்றைக்கும் மிக நன்றாக ஞாபகமிருக்கிறது... ஆசிரியர் மணியன் அவர்கள் தொலைபேசியில் சொன்னது.

"கதையை நிதானமா எழுதிக் கொடுங்கோ தலைப்பைச் சொல்லிடுங்கோ.நான் குறைஞ்சது நாலு வாரமாவது விளம்பரம் வைக்க வேண்டாமா... இந்த இதழில் ஆரம்பமாறதுன்னு."

"கொஞ்சம் யோசிக்க டயம்... கொடுங்கோ சார்"

"யோசனையே கூடாது... பட்டுனு சொல்லிடணும்..."

"சரி... 'இந்த இதழில் ஆரம்பமாகிறது' ன்னு வச்சிடுங்கோ..."

"அதாம்மா.... தலைப்பு என்ன..."

"தலைப்பே அதான் சார், இந்த இதழில் ஆரம்பமாகிறது."

அந்தப் பக்கம் ஒரு கணம் மெளனம் அடுத்தாற்போல "பேன்" என்று சிலாகிப்பு....

கதை ஒவ்வொரு வாரமும் வெளியாகி, ஆக - ஆசிரியர் அவ்வப்போது தொலைபேசியாலேயே அழைத்துப் பாராட்டினார். ஒவ்வொரு முறையும் கதையைப் பற்றிப் பேசுகிறபோதெல்லாம் – 'இந்த இதழில் ஆரம்பமாகிறது' என்கிற தலைப்பையும் மறக்காமல் பாராட்டினார்.

"கதைக்கு ஏற்ற தலைப்பு...."

ஆமாம்... கதாநாயகி அபர்ணாவின் வாழ்வும் தாழ்வும் - அவன் கணவன் பிரசன்னா வாய் திறந்து, தனது நிலை உணர்ந்து பேசுவதில்தான் இருக்கிறது. அவனது இதழினால் தனது பெயர் உச்சரிக்கப்படுகிற அந்த நாளை - அந்த நிமிடத்த சந்திப்பதற்காக அவள் படுசிறு பாடு இருக்கிறதே...

'இதெல்லாம் கதைகள்லேதான் நடக்கும், நிஜத்துல் இப்படி எல்லாம் நடக்குமா... - நடந்தா - யாராலே தாங்க முடியும்."

- இப்படி சொல்பவர்களுக்கு ஒரு வார்த்தை...

இந்தக் கதையில் முன்பாதி - அதாவது கல்யாணம் என்கிற தனது நண்பன் தலையில் விழ வேண்டிய அடியை பிரசன்னா தன் தலையில் வாங்கிக் கொண்டு 'கோமா'வில் விழுந்த கதை வரையில் - என் சினேகிதியின் கணவனுக்கு நடந்த விபத்துதான். அவன் பக்கத்தில் உட்கார்ந்து இடைவிடாமல் பேசிப் பேசியே - அவனது நினைவை, உணர்வுகளை பதினெட்டு நாட்கள் போராடி மீட்டுக் கொண்டு வந்தாள் அவள்....

அதற்குப் பின் - எதற்குமே பிரயோசனமில்லாதக் கணவனை விட்டில் கொலு பொம்பை போல் அலங்காரமாய் உட்கார வைத்துக் கொண்டு, ஆண் காரியம், பெண் காரியம் இப்படி எல்லாவற்றையும் ஒருத்தியாய் கவனித்து குடும்பத்தையே துாக்கி நிறுத்தியது - எனது இன்னொரு சினேகிதியின் தாயாருடைய கதை...

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, அந்த மனிதர் இப்படியேதான் இருப்பார். காலை எட்டு மணிக்கே அவரைக் குளிப்பாட்டி, பனிச்செனத் தும்பைப் பூ மாதிரி வேட்டி கட்டி, சட்டை அணிவித்து, நெற்றியில் பட்டையாய் திருநீறிட்டு - வாசல் வராந்தாவில் ஒரு நாற்காலியைப் போட்டு கணவனை உட்கார வைத்திருப்பான் அந்த அம்மாள். பள்ளிக்குக் கிளம்பும் போது சினேகிதியை அழைத்துக் கொள்ள அவள் வீட்டு வாசலில் நான் நிற்கும் போதெல்லாம் இந்த பொம்மை மாமா 'வை அளப்பரிய வியப்புடன் பார்ப்பேன்.

சலனமே இல்லாமல், தனது மடியில் விழும் நவமணிகளையும், சடலங்களையும் ஒன்றாகவே பாவிக்கும் கங்கா தேவி போல்

எத்தனை கோடரியால் வெட்டிப் பிளந்தாலும் - மறுபடியும் மறுபடியும் நெல்லாய், தாயாய். கனியாய், விளைந்து - கோடரி தாக்கும் மனிதனுக்கே உதவும் மண் மாதா போல-

இக்கதையின் நாயகி அபர்ணாவும்... களங்கமே இல்லாத - அதே சமயம் எது வந்தாலும் எதிர்கொள்ளும் மனோதிடம் உள்ளவளாக....

ஒவ்வொரு முறையும் எழுதுதவற்காக நான் பேனாவை எடுக்கும் போதெல்லாம் - எனது கதாநாயகிகளை இந்தப் "பேனா உளி" கொண்டு செதுக்குகிற போதெல்லாம்... பொறுமையும், கருணையும் நிரம்பப் பெற்ற எனது இந்திய சசோதரிகளை ஒரு கணம் நினைத்துக் கொள்வேன்....

குறட்டை விட்ட பாவத்துக்காகவே கணவனை விவாகரத்து செய்யும் மேலை நாட்டுப் பெண்களுக்கு - கல்லையும் புல்லையும் கணவனாக மதிக்கும் நம் நாட்டுப் பெண்கள் அதிசயமாகத் தோன்றுவதில் வியப்பில்லை.

பல சமயங்களில் இவர்களின் பொறுமையே இவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.

இப்படிக்கு உங்களன்புள்ள

-அனுராதா ரமணன்.

Indha Ithazhil Arambamagirathu