Appusamy 80 Part 1

ebook

By Bakkiyam Ramasamy

cover image of Appusamy 80 Part 1

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

ஸர் ஆர்தர் கானன்டைலுக்கு அவரது அற்புத சிருஷ்டியான உலகப் புகழ் துப்பறியும் ஷெர்லக் ஹோம்ஸின் மீது ஒரு கால கட்டத்தில் சலிப்பு ஏற்பட்டு விட்டதாம்.எத்தனை காலத்துக்குத்தான் இந்த ஷெர்லக் ஹோம்ஸ் மனுஷன் தன்னோடு வந்து கொண்டிருப்பான். இவனைத் தொலைத்துத் தலை முழுகி விட வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வாராம். ஆனால் இன்றைக்கு ஏறக்குறைய 150 வருஷமாகியும் ஷெர்லக் ஹோம்ஸ் காரெக்டர் உலகளாவிய புகழ்பெற்று நீடித்து நிலைத்து இருக்கிறது.

ஒரு வில்லனுடன் ஏற்பட்ட பயங்கர மோதலில் வில்லன் மட்டுமல்ல ஷெர்லக் ஹோம்சும் மலையுச்சியிலிருந்து கீழே பள்ளத்தில் விழுந்து மாண்டு விட்டார் என்பதாக எழுதி ஏரைக் கட்டிவிட்டார். 'விட்டதுடாப்பா அவன் தொல்லை!' என்று சந்தோஷமாக சீட்டி அடித்துக் கொண்டிருந்தார் கானன்டைல்.ஆனால் உலகம் பூராவிலுமிருந்த ஷெர்லக் ஹோம்ஸ் ரசிகர்கள் வெகுண்டெழுந்தனர். 'தன்னிகரில்லாத எங்கள் துப்பறியும் சிங்கத்தை எப்படி நீங்கள் சாகடிக்கலாம். பிழைக்க வைக்கவில்லையென்றால் உங்களைச் சாகடித்து விடுவோம்' என்று மிரட்டி ஆர்ப்பாட்டம் செய்யவும், கானன்டைய்ல் 'த ரிடர்ன் ஆஃப் ஷெர்லக் ஹோம்ஸ்' என்பதுபோல துப்பறிபவரை மறுபடி பிழைக்க வைத்து கதைகளைத் தொடர்ந்தார்.

ஊரார் கதையிலிருந்து உள்ளூர்க் கதைக்கு வருகிறேன்.

அப்புசாமி சீதாப்பாட்டி கதாபாத்திரங்களுக்கு இன்றைய தேதியில் 42 வருடம் ஆகிறது. அதாவது நாற்பத்திரண்டு வருஷங்களாக அந்த இரு பாத்திரங்களும், அவர்களது பட்டாளமும் என் கட்டுப்பாட்டுடனோ, கட்டுப்பாடு இல்லாமலோ தமிழகத்தில் கொட்டமடித்து வருகிறார்கள்.

தமிழ் கூறும் நல்லுலகம் கோமாளி அப்புசாமியை மன்னித்து, விரும்பி, ரசித்து ஆதரித்து வருகிறார்கள். அப்புசாமி மீது நான் இடறி விழுந்தேன் என்று தான் சொல்லவேண்டும்.

அது ஒரு திங்கட்கிழமை. நான் வெறுங்கையையும் மண்டை நிறைய பயத்துடனும் காரியாலயம் சென்றேன். 'உங்க கதை?' என்றார். திங்களன்று அறையில் நுழைந்ததும் உதவி ஆசிரியரின் கையைத்தான் அவர் முதலில் பார்ப்பார். அவர் கதை கேட்கக் கை நீட்டுவது குசேலரிடம் கண்ணபிரான் அவலுக்குக் கை நீட்டுவது போலிருக்கும்.

"நேற்று வீட்டிலே கொஞ்சம் கசாமுசா?" என்று பயத்துடன் முணுமுணுத்தேன். "சண்டையா?" என்றார் குறுஞ்சிரிப்புடன்.

அவர் சிரித்ததும் தைரியம் வந்து கொஞ்சம் வெலாவாரியாக ஞாயிறன்று வீட்டில் நடந்த சின்ன சம்பவத்தை விவரித்தேன்.

என் மனைவியும் நானும் மாமனார் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தோம். 'நீ போயிண்டே இரு. நான் இதோ வர்றேன்' என்று மனைவியை முன்னதாக அனுப்பிவிட்டு, பாத்ரூம் கீத்ரூம் போய்விட்டு சில பல அலங்காரங்கள் செய்து கொண்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு வெள்ளாளத் தெரு பஸ் ஸ்டாப் போய்ப் பார்த்தால் அங்கே மனைவியைக் காணோம்!

பதறிப் போய்விட்டேன். மனசில் பயங்கரமான கற்பனை. கதை எழுதறதுக்குக் கற்பனை வருதோ இல்லையோ? இது மாதிரி விஷயங்களில் கற்பனை பறக்கும். நாலு நாள் முன்தான் பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருந்தது. 'பஸ் ஸ்டாப்பில் நகைகள் அணிந்து நின்ற பெண்ணைக் குண்டர்கள் கடத்தல்!'பரபரத்துவிட்டேன். ஆளானப்பட்ட வீரரான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே மனைவியைக் காணோமென்று பதறினாரென்றால் நான் ஒரு சாதா மானிடன். பயப்படாமலிருக்க முடியுமா? நல்ல வேளை அப்போ என் மருமான் மார்க்கெட்டிலிருந்து புடலங்காயைத் தூக்கியவாறு வந்து கொண்டிருந்தான். "டேய் மணி! மாமியைப் பார்த்தியாடா?" என்று ரோடிலேயே ஒரு கத்தல் போட்டேன். "மாமியா? பஸ் 23Cல் ஏறி இப்பத்தானே போகிறா.நான்தான் ஏற்றி விட்டுட்டு காய் வாங்கி வர்றேன்" என்றான். வயிற்றில் ஒரே சமயம் பாலும் வெந்நீரும் வார்த்தான்.

மனைவி மேல் மகா கோபம். 'எனக்காக வெயிட் பண்ணாமல் எப்படிப் போகப் போச்சு?' நான் உடனே ஆட்டோ பிடித்து மாமனார் வீட்டுக்குப் போய், அவளுடன் ஒரு சண்டை. "கொஞ்சமாவது பொறுப்பிருக்கா? நான் வரதுக்குள் புறப்படணுமா?" அது இது என்று சண்டை போட்டேன்.

'நீங்க சொன்னீங்களா? பஸ் ஸ்டாப்பிலேயே காத்திருக்கச் சொல்லி, 23C வர்றது எவ்வளவு அபூர்வம்னு உங்களுக்கே தெரியும். பஸ் வந்தது. மருமான் ஏற்றிவிட்டான். நீங்க அடுத்த பஸ்ஸிலே வருவீங்கன்னு போய்விட்டேன். அதுக்கு ஏன் கோபம்?" என்றாள்.

"ராத்திரி பெரிய வாக்குவாதம். அந்த மனத் தாங்கலினால் கதை எழுதவில்லை, ஸாரி சார்," என்றேன்.

"அதனாலென்ன? நாளைக்கு எழுதிண்டு வந்திடுங்க" என்ற ஆசிரியர், "உங்க மாமனாருக்குக் கூடக் கோபம் வருமா? மாமியார் கூடவெல்லாம் சண்டை போடுவாரா?" என்றார். "கோபம் எனக்குத்தான் சார் வந்தது. நான்தான் மனைவிகிட்டே...

Appusamy 80 Part 1