With an OverDrive account, you can save your favorite libraries
for at-a-glance information about availability. Find out more
about OverDrive accounts.
"உலகின் மிகப் புதுமையான தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அதை வழி நடத்தபோகும் புதிய தலைவர் பற்றிய ஒரு கூர்மையான பார்வை. ஜூன் மாதம் பத்தாம் தேதி பிறந்த இவர், அடக்கமான ஒரு தொழில் நுட்ப வல்லுநர், பெரும் ஐ ஐ டி காரக்பூரில் படித்தவர். அவர் உருவாக்கிய அல்லது வழிநடத்திய எல்லாத் தயாரிப்புகளுமே வெற்றி பெற்றிருக்கின்றன-குரோம்,குரோம் ஓஎஸ்,ஆண்டிராய்டு இப்படிப் பலவற்றை சொல்லலாம். ஏனெனில் கூகிளில் இவர் தொட்டதெல்லாம் பொன்னாகி இருக்கின்றன. மக்களை வழி நடத்துவதிலும், புதுமையாக யோசிப்பதிலும் இவர் தேர்ந்தவர். ஆனாலும், கூகிள் தன் தயாரிப்புகளை ஒழுங்குபடுத்தி, அதில் முன்பைவிட குறைவான பொறுப்புகளைக் கொண்ட,அதே நேரம் முழுமையான கவனக் குவிப்பை அதிகரித்த கூகிளின் தலைவராக சுந்தர் பிச்சை நியமனம் செய்யப்பட்டதில் சில கேள்விகள் எழும்புவதைதவிர்க்க முடியாது:
வருங்கால கூகிளில் சுந்தர் பிச்சை பங்கு என்ன?
ஏற்கனவே உள்ள தயாரிப்புகளில் கூகிள் கவனம் செலுத்துமா அல்லது புதிய தயாரிப்புகளில் கவனம் குவிக்குமா?
பேஜ்,ப்ரின் மற்றும் ஷிமிடால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்பட்ட கூகிளை, சுந்தர் பிச்சை முன்னே கொண்டு செல்வாரா அல்லது அவரது விமர்சகர்கள் சொல்வதுபோல
இந்த முக்கியமான பொறுப்புக்கு அவர் இன்னும் தயாராகவில்லையா?
கூகிளின் வருங்காலம் இந்த கேள்விகளுக்கெல்லாம் அவரது கடந்த காலத்தை ஆராய்ந்து பதில் சொல்ல முனைகிறது. சுந்தர் பிச்சையின் குழந்தைப் பருவம், கல்வி, தொழில்நுட்ப உலகில் அவர் புகுந்தது,கூகிளில் அவர் வளர்ந்தது,கூகிளின் முக்கியமான தயாரிப்புகளை அவர் வழி நடத்தியது போன்ற பழ விஷயங்களை இந்தப் புத்தகம் ஆராய்கிறது.