Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். "ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு "லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது "லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்" என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். "வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். "வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன" என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு.
தமிழன் இப்படி அப்படி என்ற வெற்றுவார்த்தை ஜாலங்கள் தாண்டி இன்றைய தமிழன் எப்படி என்று சொல்லிப் போகிறார் வெள்ளியங்காட்டான் "தமிழன்" என்ற இந்தப் பாவியத்தில். //வலையரென்றொதுக்கப்பட்டார்/ வள நெய்தல் நிலத்தினோர்கள்/ புலையரென்றொதுக்கப்பட்டார்/ புகழ் மருதத்தினோர்கள்/ மலையரென்றொதுக்கப்பட்டார்/ மல்கு பூங் குறிஞ்சி மக்கள்/ கொலைஞரென் றொதுக்கப்பட்டார்/ கூர்ம்பரல் பாலை வாழ்நர்// என்கிறார்.
பேராசிரியர் ரமணியின் ஒலி நூல் வடிவத்தில் கேட்கலாம்.