பெரியவா காலடியிலிருந்து

ebook

By S R Krishnan Thiruvaiyaru

cover image of பெரியவா காலடியிலிருந்து

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

மகா பெரியவாளின் திருக்கரங்களால் தீட்சைப் பெற்று, பால்யத்திலிருந்தே குரு கடாட்சத்துடன் வளரும் பாக்கியம் பெற்றவர், 'பெரியவா காலடியிலிருந்து' என்ற இப் புத்தகத்தின் ஆசிரியர் திரு. திருவையாறு கிருஷ்ணன் அவர்கள். மீனானது எவ்வாறு தனது குஞ்சினை பார்வையாலே காக்குமோ அவ்வாறே மஹா பெரியவாளின் கருணா கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கப் பெற்றவர்.

நாம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மாத்ரு வாத்ஸல்யத்தோடு மஹாபெரியவா தன்னிடம் கரிசனம் காட்டி, கண்டித்து, போதித்து, அறிவுரைகள் கூறி வழி நடத்திய நிகழ்வுகளை, அவர் காலடியில் இருந்து பெற்ற அனுக் கிரகங்களை, ஒரு சம்பவக் கோர்வையாக நமது காமகோடி மாத இதழில் கட்டுரையாக எழுத ஒப்புக்கொண்டார். அதுவே தற்போது புத்தகமாக நமது கரங்களில் இருக்கிறது. இதில் தனது அனுபவங்களுடன் அவர் தரிசனத்திற்கு சென்று இருந்த சமயத்தில் வேறு சிலருக்கு அவர் அனுக்கிரத்த விஷயங்களையும் சுவைபட எழுதி இருக்கிறார்.

எழுத்தாளர், பாடகர், வாக்கேயக்காரர், வேதபண்டிதர், கவிஞர், உபன்யாசகர், சமூக சேவகர் என்று பன்முகம் கொண்டவராக விளங்கும் இவரது புலமையையும் திறமையையும் கிரி நிறுவனம் பெருமையாக பார்ப்பதோடு, தனது பரபரப்பான அலுவல்களுக்கு இடையேயும் இந்த புத்தகத்தை திறம்பட எழுதியதற்காக தனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

இப் புத்தகம் மகா பெரியவாளின் பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருப்பது மட்டுமல்லாமல், இந்த எழுத்துப் பதிவுகள் பின்வரும் காலத்தினருக்கு ஒரு விஷயப் பெட்டமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மகா பெரியவா சரணம்! ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!

பெரியவா காலடியிலிருந்து