Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
1935 மார்ச் மாதம் முதல் 'மணிக்கொடி' மாதம் இருமுறை பத்திரிகையாக வெளிவந்தது. புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு. ப. ராஜகோபாலன், பி. எஸ். ராமையா, ந. சிதம்பரசுப்பிரமணியன், பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி), சி. சு. செல்லப்பா, மௌனி, கி. ரா. எம். வி. வெங்கட்ராம், ஆர். சண்முக சுந்தரம், லா. ச. ராமாமிர்தம்ஆகியோருக்கு தக்க தருணத்தில் காலம் அமைத்துக் கொடுத்த இலக்கிய அரங்கம் ஆயிற்று. மணிக்கொடியில் எழுதியவர்கள் ஒரே விதமான இலக்கியக் கொள்கையோ, நோக்கும் போக்குமோ கொண்டிருந்தவர்கள் அல்லர், ஒரே தரத்தினரும் இல்லை. அவர்களுக்கிடையே கருத்து வேற்றுமை அதிகமாகவே இருந்தது. அதை வேகத்தோடு வெளியிடவும் அவர்கள் தயங்கியதில்லை. ஆனால், அவர்கள் உலக இலக்கியத்தின் சிறுகதை வளத்தை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தவர்கள். அதே தரத்தில் தமிழிலும் சிறுகதைகள் வரவேண்டும் என்ற தீவிர வேட்கை கொண்டவர்கள். ஆர்வமும் எழுத்து அனுபவமும் இலக்கிய ருசியும் உடையவர்கள். தமிழ் இலக்கியம் மறுமலர்ச்சி பெறவேண்டும் என்ற எண்ணத்திலும் அதற்காக உற்சாகமாக உழைப்பதிலும் அவர்கள் ஒத்த மனம் உடையவர்களாக இருந்தார்கள். சங்கு சுப்ரமணியம், தி.ஜ.ரங்கநாதன், க.நா.சுப்ரமணியம், பி.எம்.கண்ணன், சபரிராஜன், பி.எஸ்.சங்கரன், பி.வி.லக்ஷ்மி, ஸ்ரீமதி க.பத்மாவதி, ஸ்ரீமதி மீனாக்ஷி கணேசய்யர், வை.மு.கோதைநாயகி, கு.ப.சேது அம்மாள், சங்கரி ராமசந்திரன், ஸ்ரீமதி சௌபாக்கியம், ஸ்ரீமதி மங்களம், ஸ்ரீமதி ராஜி, ஸ்ரீமதி கமலாபாய், எஸ்.விசாலாட்சி, எஸ்.கமலாம்பாள், மதுரம், என்.நாமகிரியம்மாள், கே.கமலா ,கமலா விருத்தாசலம், அனசூயா தேவி, க. பத்மாவதி ஆகியோரும் மணிக்கொடியில் எழுதியவர்கள்.
இந்த ஒலி நூலில் ரமணியின் நேர்த்தியான வாசிப்பில் கு ப ரா வின் மணிக்கொடி கதைகளாக 11 கதைகள் ஒலி வடிவம் பெறுகின்றன.