Suthanthira Vengai

ebook

By Gauthama Neelambaran

cover image of Suthanthira Vengai

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

மருதநாயகம் தொடர்கதையை எழுத நான் எத்தனை வரலாற்று நூல்களை வாசித்தேனோ, அத்தனை நூல்களிலும் பூலித்தேவன் என்முன் விஸ்வரூபம் எடுத்து நின்றார். "என் சரித்திரம் தன் கண்களில் படவில்லையா? அதை ஒரு புதினமாக எழுத உனக்குத் தோன்றவில்லையா?" என்று அவர் கேட்பது போன்றிருந்தது. நான் உடனே, 'வேங்கை பேட்டை', 'பதுங்காத புலி' போன்ற சிறுகதைகள் சில எழுதினேன். அவள் 'பாக்யா', 'தினமலர்' தீபாவளி மலர்களில் வெளிவந்தன. 'அவ்வளவுதானா? அன்று பூலித்தேவர் என் கனவில் தோன்ற, வினவினார், 'தங்க மங்கை' என்னும் மாத இதழில் 'வெற்றி வேங்கை' என்று குறுநாவல் எழுதினேன். அவர்கள் அதை ஒரு சில மாதங்கள் பிரித்து வெளியிட்டார்கள். 'ஒரு பெரிய சரித்திர நாவலாக எழுத வேண்டிய வரலாற்றை ஏன் இப்படிச் சுருக்கி விட்டீர்கள்?' - என்று அதை வாசித்த பலரும் எனக்குக் கடிதம் எழுதினார்கள். சில நண்பர்கள் நேரிலும் கூறினர்.அண்மையில் நானும் என் மனைவி அகிலாவும் சேர்ந்து எட்டயபுரம் சென்று, பாரதி மணிமண்டபம், பாரதி பிறந்த இல்லம் ஆகியவற்றைத் தரிசித்தோம். 'குங்குமம்' வார இதழில் பணிபுரியும் நண்பர் குருவிராஜன் அய்யனார் கோவில் பட்டியிலிருந்து ஒரு கார் ஏற்பாடு செய்து, எங்களைக் கழுகுமலை முருகன் கோயில், சங்கரன் கோயில் சங்கர நாராயணர் ஆலயம் நெற்கட்டாஞ்செவ்வலில் உள்ள பூலித்தேவன் கோட்டை, திருநெல்வேலி, கயத்தாறு, பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.

பூலித்தேவனின் கோட்டை பார்த்ததும் எனக்கு மெய்சிலிர்த்தது. சென்னை திரும்பியதும் ஒரே மூச்சாக உட்கார்ந்து 'சுதந்திர வேங்கை'யூரின் இதர அத்தியாயங்களை எழுதி முடித்தேன், பத்துப் பதினைந்து ஆண்டுக்கால் முயற்சிகளுக்குப் பின் 'சுதந்திர வேங்கை' இதோ முழுமையாக உங்கள் கைகளில்.

'தமிழ் வீரன் பூலித்தேவன்' என்னும் நூல் 1980-ஆம் ஆண்டு என் கைகளில் கிடைத்தது. துர்க்காதாஸ் எஸ்.கே, பப்புவாமி எழுதிய அந்த நூலை வாசித்தபோதே பூலித்தேவன் என் இதய அரியணையில் ஏறி அமர்ந்து கொண்டுவிட்டார். அந்த நூல் வெளியிட்ட தமிழறிஞர்

புலியூர்க் கேசிகன், என் மீது மிகுந்த அன்புள்ளவர், பல நல்ல நூல்கள் பற்றிய விவரங்களை எனக்கு எடுத்துரைப்பதோடு, நான் வரலாற்று நவீனங்கள் பல எழுதப் பெரிதும் தாக்கமளித்தவர்.

பூலித்தேவன் புகழை ஏந்திப் பிடித்தவர்களுள் முக்கியமானவர்கள் என்று தமிழ்வாணன் அவர்களையும் பேராசிரியர் ந.சஞ்சிவி அவர்களையும் குறிப்பிட்டாக வேண்டும், 'கல்கண்டு' வார இதழில் தமிழ்வாணனும், 'கலைமகள்' மாத இதழில் ந.சஞ்சீவியும் பூலித்தேவன் பற்றி மறைந்து கிடந்த பல வரலாற்று உண்மைகளை எழுதினர். அவற்றையும் நான் வாசித்திருக்கிறேன். புலவர் ந.இராசையா, பூல் மன்னன் புகழைப் பரப்புவதை ஒரு தவம் போல மேற்கொண்டிருந்தவர்.

இந்தப் பெருமக்கள் எழுதிய வரலாற்று ஆதார நூல்களின் அடித்தளத்தில் நின்றே நான் இந்த 'சுதந்திர வேங்கை' நவீனத்தை எழுதியுள்ளேன்.

துர்க்காதாஸ் எழுதிய தமிழ்வீரன் பூலித்தேவன், ந.சஞ்சீவியின் வீரத்தலைவர் பூலித்தேவர், முனைவர் ந.இராசையாவின் மாமன்னான் பூலித்தேவன், பூலித்தேவர் சிந்து, புதுக்கோட்டைச் சண்டை 'விடுதலைப் போரில் தாழ்த்தப்பட்டோரின் பங்க', எஸ்.குருகுலதாசப் பிள்ளை எழுதிய திருநெல்வேலி சீமைச் சரித்திரம், கால்டுவெல் எழுதி, ந.சஞ்சீவியும், கிருட்டினா சஞ்சீவியும் மொழி பெயர்த்த 'திருநெல்வேலி சரித்திரம்' பேராசிரியர் மு.பாலகிருஷ்ணன் எழுதிய, 'சிவகங்கைச் சாணக்கியன் தளவாய் தாண்டவராய பிள்ளை', தமிழ்வாணனின், 'கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' முனைவர் ம.நடராசன் எழுதிய, விடுதலைப் போரில் பூலித்தேவன், செ.திவான் எழுதிய விடுதலைப் போரில் வீரமிகு முஸ்லிம்கள், எம்.என்.சுப்பிரமணிய ஐயர் எழுதிய, 'வீர விலாசம்', ஈபேயவன் எழுதிய, 'மஹாபலியின் மக்கள்', ப.சிவனடி தொகுத்தெழுதிய இந்திய சரித்திரக் காஞ்சியம், வரலாற்றறிஞர் பேராசிரியர் ம.இராசசேகர தங்கமணியின் பாண்டியர் வரலாறு, த.படாலின் குணசேகரனின், 'விடுதலை வேள்வியில் தமிழகம்' டாக்டர் எஸ்.கதிர்வேல் ஆங்கிலத்தில் எழுதிய 'ஹிஸ்டரி ஆஃப் மறவாஸ்' (பக்:115 to 140) ஆகிய நூல்கள் சொல்லும் செய்திகளைத்தான் நான் கதையாக எழுதியுள்ளேன்.

'பூலித்தேவன்' வரலாற்றுக் கதையை நான் எழுதுகிறேன் என்றதும், புதுவையிலிருந்து 'மாந்தன்' இதழை நடத்தும் பொறிஞர் ஞா.ஜோசப் அதிரியன் ஆண்டோ, ந.இராசையா எழுதிய பல நூல்களை எனக்கு அனுப்பி உதவி, பக்க மூட்டினார். மத நல்லிணக்க மாமனிதராகத் திகழும் ஞா.ஆண்டோ எழுதியுள்ள 'பூலித்தேவன் வரலாற்று ஆய்வாளர் முனைவர் த....

Suthanthira Vengai